Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஆதி குணசேகரன் கேரக்டருக்காக நடிகர் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டர் இதனை நாட்களாக இல்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
எனவே யார் குணசேகரன் கேரக்டரில் இதற்கு மேல் நடிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்து வந்தனர். அப்படி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து எதிர்பாராத விதமாக மாரடைப்பு காரணமாக இறந்து போனதனை தொடர்ந்து இதற்கு மேல் எதிர்நீச்சல் சீரியல் அவ்வளவுதான் என கூறி வந்தார்கள் இருந்தாலும் அனைத்தையும் எதிர்த்து தற்பொழுது வரையிலும் டிஆர்பியில் முன்னணி வகித்து கலக்கி வருகிறது.
குணசேகரன் கேரக்டருக்காக வில்லனான வேல ராமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து படங்கள் வாய்ப்புகள் இருந்த காரணத்தினால் நடிக்க முடியாத சூழலில் இருந்து வந்தார். ஆனாலும் சன் டிவி உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமென்றாலும் தருகிறோம் கண்டிப்பாக நீங்கள் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம்.
அப்படி தற்பொழுது தான் வேல ராமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்திருக்கும் கேரக்டருக்கான ப்ரோமோ வெளியானதை அடுத்து தற்பொழுது அவருடைய சம்பளம் குறித்தும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. வேல ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூபாய் 50 ஆயிரம் சம்பளமாக பெற்று வருகிறாராம்.
இவ்வாறு சின்னத்திரையிலேயே ஒரு நாளைக்கு 50,000 வாங்கும் ஒரே நடிகராக வேல ராமமூர்த்தி விளக்குகிறாராம். இதனை அடுத்து மற்ற சீனியர் நடிகர்கள் இப்ப வந்தவருக்கு இவ்வளவு சம்பளமா? அப்பனா நாங்க எல்லாம் சும்மாவா என சன் டிவிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வைரலாகி வருகிறது.