ரீ என்ட்ரி கொடுக்கும் வடிவேலு.! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா.! அதிர்ச்சியாகும் சக காமெடி நடிகர்கள்

vadivel
vadivel

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர் வந்து சென்றுள்ளார்கள் அவர்களை எல்லாம் மக்களுக்கு நினைவில் இருப்பார்கலோ இல்லையோ ஆனால் காமெடிகளில் கலக்கி வந்த வடிவேலுவை மட்டும் மக்கள் மறக்கவே மாட்டார்கள் ஏனென்றால் அவர் காமெடி இன்னும் நெட்டிசன்களுக்கு தீனி போட்டு வருகிறது. ஏதாவது ஒரு பிரபலத்தை ட்ரோல் செய்ய வேண்டும் என்றால் வடிவேலு ரியாக்ஷனை தான் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

கடந்த பத்து வருடங்களாக வடிவேலு தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் தலைகாட்டி வந்தார் ஆனால் கடந்த நான்கு வருடங்களாகவே எந்த ஒரு திரைப்படத்திலும் வடிவேலு நடிக்கவில்லை அதற்கு காரணம் வாய்க்கொழுப்பு என்று பலரும் கூறி வந்தார்கள். வடிவேலு நடிப்பில் தொடங்கப்பட்ட பல திரைப்படங்கள் பஞ்சாயத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அந்த வகையில் இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படமும் ஒன்று.

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகிய திரைப்படம் தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வடிவேலு ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இம்சை அரசன் 23 புலிகேசி திரைப்படம் வெற்றி பெற்ற அளவிற்கு வேற எந்த திரைப்படமும் வெற்றி பெறவில்லை.

என்னதான் ஹீரோவாக நடித்தாலும் காமெடிகளிலும் அவ்வப்பொழுது தலைகாட்டி வந்தார் அதன் பிறகு ஒரு அரசியல் சர்ச்சையில் சிக்கி சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று சொல்லவேண்டும்.. அதன்பிறகு கத்திசண்டை மெர்சல் போன்ற சில திரைப்படங்களில் தலைகாட்டி வந்தார். அதன்பிறகுதான் சங்கர் தன்னுடைய சொந்த தயாரிப்பின் மூலம் 24ம் புலிகேசி திரைப்படத்தை வடிவேலுவை வைத்து தயாரித்தார்.

இந்த 24ம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலுவின் தலையீடு அதிகமாக இருந்ததால் சங்கருக்கும் வடிவேலுக்கும் அதிகமாக பிரச்சனை எழுந்தது அந்த பிரச்சனை பஞ்சாயத்தாக முற்றியது அந்த திரைப்படம் தொடங்கிய பொழுது வடிவேலுக்கு மார்க்கெட் கிடையாது ஆனால் எட்டு கோடி சம்பளம் கொடுத்து அந்த திரைப் படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் ஷங்கர். இந்த நிலையில் தற்பொழுது தனது மீது உள்ள அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் வடிவேலுக்கு 8 முதல் 10 கோடி வரை சம்பளம் தர தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பு நிறுவனம்.

இதனைக் கேள்விப்பட்ட காமெடி நடிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.