அப்பொழுது நான் தமாஷாக சொன்னது இன்று உண்மையாகிவிட்டது.! கண்கலங்கிய வடிவேலு

vativelu
vativelu

எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் லிஸ்டில் முதன்மை வாய்ந்தது நடிகர் வடிவேலு. இவர் செய்த சிறு சிறு தவறுகளினால் தற்பொழுது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகர் வடிவேலு சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் விஜயகாந்தினை பற்றிய பல மேடைகளில் மிகவும் தவறாக கூறியிருந்தார்.

இதன் காரணமாகத் தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. அதன்பிறகு இவர் இதற்கு மேல் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறினாராம் அதோடு சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக நடந்து கொண்டதாலும் இவருக்கு திரைப்படங்களில் சுத்தமாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் வடிவேலு தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு பற்றிய பல வீடியோக்களை வெளியீடு வருகிறார்.  அந்த வகையில் தற்போது சும்மா இருக்கிறது ரொம்ப கஷ்டம் என்று ஒரு திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த காமெடி ஒன்றை கூறியிருந்தேன்.

ஆனால் அது உண்மையாகி தற்பொழுது உடலில் தெம்மு இருந்தாலும் எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டில் சும்மா இருப்பது மிகவும் கடினம். நான் காமெடியாக கூறினேன் ஆனால் தற்பொழுது உண்மையாக மாறி உள்ளது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார்.