தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் வசந்தபாலன் இவர் முதலில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவர் ஷங்கரிடம் ஜென்டில்மேன், காதலன்,இந்தியன்,ஜீன்ஸ் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் வசந்தபாலன் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த தரமான திரைப்படங்களை பற்றி தான் நாம் தற்பொழுது பார்க்க உள்ளோம்.
ஆல்பம்: வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இவருக்கு தோல்வியை தந்துவிட்டது அரியான் ராஜேஷ், ஸ்ருதிக்கா போன்ற பல பிரபலங்களின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் மிகவும் சுதப்பி விட்டது.
அங்காடித் தெரு: மகேஷ்,பாண்டி,அஞ்சலி போன்ற பல பிரபலங்களின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி விட்டது என்றுதான் கூறவேண்டும் அருண்பாண்டியன் தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி,ஜிவி பிரகாஷ் இசையமைத்தார்கள் பாடல்கள் மட்டுமே ரசிகர்களிடையே அதிகம் ரசிக்கப்பட்டது.
வெயில்: வசந்தபாலன் இயக்கத்தில் பரத்,பசுபதி,பாவனா,பிரியங்கா போன்ற பலரின் நடிப்பில் வெளியான கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 30 கோடி வரை வசூல் செய்துவிட்டது மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர்தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவான்: வரலாற்று கதையை மையமாக வைத்து எடுத்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது ஆதி கதாநாயகனாக நடிப்பதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தாலும் படம் கொஞ்சம் தோல்வியடைந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
காவியத்தலைவன்: ஏ ஆர் ரகுமான் இசையில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் பிரித்விராஜ், நாசர், சித்தார், வேதிகா போன்ற பலர் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம்.
ஜெயில்: ராதிகா சரத்குமார்,யோகி பாபு,அபர்னதி,ஜிவி பிரகாஷ் போன்ற பலரின் நடிப்பில் வெளியாகி படம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் கூற வேண்டும் இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து நபர்களும் தற்போது சினிமாவில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்கள்.