ஜெயிலர் படத்தில் மெயின் வில்லனாக நடித்த வசந்த் ரவி இத்தனை கோடிக்கு அதிபதியா.?

vasanth ravi
vasanth ravi

Jailer Movie: ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வரும் நிலையில் இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் குறித்த ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படி ரஜினியின் மகனாக நடித்திருந்த வசந்த் ரவியின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் தோல்வியை சந்தித்த நிலையில் ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருந்து வந்தார். அப்படி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

ரூபாய் 200 கோடி முதல் 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவான ஜெயிலர் உலகம் முழுவதும் ரூபாய் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இவ்வாறு ரஜினி தனது 70 வயதை கடந்த பிறகும் இப்படி ஒரு சாதனை படைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் தான் இவர் சூப்பர் ஸ்டார் எனவும் கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ் குமார், மோகன்லால், விநாயகன், வசந்த் ரவி, ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி, கிஷோர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தார்கள்.

அப்படி முக்கியமாக ரஜனயின் மகனாக வசந்த் ரவி நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் மூலம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சினை பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலர் திரைப்படம் தான் நல்ல பிரபலத்தை பெற்று தந்துள்ளது. வசந்த் ரவி வசந்த பவன் ஹோட்டலின் உரிமையாளரின் மகன் ஆவார். இவரின் சொத்து மதிப்பு ரூபாய் 10 முதல் ரூபாய் 15 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.