குலுங்க குலுங்க சிரிக்க வைக்க உருவாக இருக்கிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.. ஆனா ஹீரோ சிவகார்த்திகேயன் கிடையாதுங்கோ..

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருந்தார் காமெடி காதல் என கமர்சியல் திரைப்படமாக உருவாகியது. மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியவர்கள் நடித்திருந்தார்கள்.

டி இமான் படத்திற்கு இசையமைத்திருந்தார் அதன் பிறகு டி இமான் சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைப்பதே கிடையாது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது காரணமாக இருவரும் தனித்தனியாக பணியாற்றி வருகிறார்கள். இருவரும் இணைந்த பணியாற்றிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் ஹிட் அடித்தது.

இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 திரைப்படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு ஹீரோவாக சிவகார்த்திகேயன் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க கவிணை முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கவின் ஏற்கனவே லிஸ்ட் டாடா ஸ்டார் என பல திரைப்படங்களில் பட்டய கிளப்பிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 திரைப்படத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என கூறப்படுகிறது விரைவில் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.