கல்லாப்பெட்டியை நிரப்பும் “விருமன் படம்” – 5 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

viruman
viruman

சிவகுமாரின் இரண்டாவது மகன் நடிகர் கார்த்தி தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் இப்பொழுது விருமன் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது கிராமத்து கதைகளை எடுத்து வெற்றி கண்டுள்ள முத்தையா உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து கார்த்தி விருமன் படத்தில நடித்தார்.

இந்த படம் முழுக்க முழுக்க  கிராமத்து கதை  அதில் காமெடி சென்டிமென்ட், ஆக்சன், காதல் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் தற்பொழுது விருமன் திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் இந்த படத்தில் ஹீரோயின்னாக நடித்து சினிமா பயணத்தை ஆரம்பித்துள்ளார் .

மேலும் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ் ராஜ், சூரி, சிங்கம் புலி, மனோஜ், மைனா நந்தினி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். விருமன் படம் வெளியாகி தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டே  போவதால் படக்குழு எதிர்பார்த்ததை விட வசூல் தாறுமாறாக அள்ளி வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் விருமன் படக்குழு அண்மையில் படம் பெற்று அடைந்ததாக கூறி பிரஸ்மீட் வைத்து அசத்தியது இதனை தொடர்ந்து கார்த்தியின் விருமன் திரைப்படம் 5 நாள் முடிவில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் விருமன் படம் 5 நாட்களில் மட்டுமே சுமார் 44 கோடி வசூல்

அள்ளியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களிலும் பெருமளவு படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் கார்த்திக்கின் விருமன் திரைப்படம் இன்னும் பல கோடிகளை அள்ளித் தான் நிற்கும் என பெரிய வருகிறது இதனால் கார்த்தியும் சரியும் சரி படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.