வாரிசு படத்தை விநியோகம் செய்யும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.! எந்தெந்த இடத்தில் தெரியுமா?

vijay
vijay

நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக ஹிட் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் இந்த படம் அஜித்துக்கு  61வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தை ஹச். வினோத் இயக்கிய உள்ளார்.

மிக பிரம்மாண்ட பொருள் செலவில் போனி கபூர் தயாரித்துள்ளார். படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது தமிழகத்தில் உதயநிதியின்  ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது.

இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாக படங்களை தயாரிக்காமல் விநியோகம் செய்கிறது இதனால் உதயநிதிக்கு நல்ல காசு பார்த்து வருகிறார் அண்மையில் கூட கமலின் விக்ரம் படத்தை விநியோகம் செய்து பல கோடி லாபம் பார்த்தார். அதனைத் தொடர்ந்து அஜித்தின் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் மிக பிரமாண்ட அளவில் விநியோகம் செய்கிறார்.

இதனால் அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழகத்தில் அதிக திரையரங்குகளை கைப்பற்றி கோலாகலமாக ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. இப்படி இருக்கின்ற நிலையில்  விஜயின் வாரிசு படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவி நிறுவனம் தமிழகத்தில் உள்ள நான்கு முக்கிய இடங்களில் விநியோகம் செய்யும் உரிமையை பெற்று இருக்கிறது.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..  சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு ஆகிய இடங்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறதாம். இந்த தகவல் தற்பொழுது தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்தாலும்.. மறுபக்கம் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது இதோ அந்த அதிகாரப்பூர்வ தகவல்களை நீங்களே பாருங்கள்.