முன்பதிவில் ஆதிக்கம் செலுத்தும் விஜயின் வாரிசு.. காத்து வாங்கும் துணிவு.! எங்கு தெரியுமா..

ajith-vijay
ajith-vijay

முக்கிய பண்டிகை நாட்களில் டாப் நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகுவது சகஜம் ஆனால் ரசிகர்கள் அதை மிகப்பெரிய ஒரு திருவிழாவாக கொண்டாடுவார்கள் அந்த வகையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் விஜய் படங்கள் நேருக்கு நேராக மோத இருக்கின்றன ஆம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

விஜயின் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு ஆக்சன் பேக் திரைப்படம் ஆக உருவாக்கி இருக்கிறது. துணிவு திரைப்படம் அதற்கு எதிர்மறாக முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து ஃபுல் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது இரண்டு திரைப்படங்களுமே சூப்பராக வந்துள்ளதால் இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

படம் வெளிவர இன்னும் இன்னும் சில நாட்கள் இருக்கின்றன ஆனால் அதற்கு முன்பாகவே ரசிகர்களை சந்தோஷப்படுத்தவும் மறுபக்கம் பிரமோஷன் வேலைகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.  அஜித் தனது படத்தை விளம்பரப்படுத்துவதை எப்பொழுதே நிறுத்திவிட்டார் ஆனால் விஜய் அப்படி கிடையாது..

தனது ஒவ்வொரு படத்தின் ஆடியோ விழாவிற்கும் கலந்து கொண்டு படத்தைப் பற்றி பேசி பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வருகிறார் அந்த வகையில் வாரிசு படத்திற்கு மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் நாளை நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் வெளிநாடுகளில் வாரிசு மற்றும் துணிவு பணத்தின் முன்பதிவுகள் சோராக நடைபெற்று வருகின்றன.

அதன்படி UK – வில் முன்பதிவு ஜோராக நடைபெற்று வருகிறது இதுவரை அங்கு இரண்டு திரைப்படங்களும் எவ்வளவு முன்பதிவு ஆகி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது. வாரிசு 3760 டிக்கெட் முன்பதிவு துணிவு 925 முன்பதிவு டிக்கெட்டுகளும் செய்துள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளன.