ரிலீஸ் ஆவதற்கு முன்பே லாபம் பார்க்கும் வாரிசு.! அப்போ துணிவு.?

thunivu-varisu
thunivu-varisu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இதில் நடிகர் விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சியுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து வாரிசு படம் வெளியாவதற்கு இன்னும் கூறிய காலங்கள் இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்திலிருந்து அடிக்கடி அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கிறது அந்த வகையில் சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது விநியோக உரிமை, சாட்டிலைட், ஓடிடி, ஆடியோ உரிமை, என அனைத்து உரிமைகளையும் சேர்த்து 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதேபோல நடிகர் அஜித் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக அஜித் அவர்கள் இணைந்துள்ள திரைப்படம் தான் துணிவு இந்த திரைப்படமும் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

அஜித்தின் துணிவு திரைப்படமும் விஜயின் வாரிசு திரைப்படமும் கிட்டத்தட்ட ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள் இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வாரிசு படம் கிட்டத்தட்ட 300 கோடி வரை ரிலீஸ் ஆவதற்கு முன்பே லாபம் பார்த்து விட்டதாகவும் துணிவு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு 193.6 கோடி வரை வசூலித்து உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. துணிவு படத்தின் சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம், ஓவர்சீஸ் உரிமையை என அனைத்தும் சேர்ந்து மொத்தம் 193.6 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இந்த இரண்டு தகவல்களும் இன்னும் உறுதியான தகவலாக தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.