ஃப்ரீ ரிலீஸ் பிசினஸில் வாரிசை அடித்து நொறுக்கிய துணிவு.! இனிமேல்தானே இருக்கு சரியான ஆட்டம்…

thunivu-varisu
thunivu-varisu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் அஜித் அவர்கள் தற்போது நேர்கொண்ட பார்வை, வலிமை, திரைப்படத்திலிருந்து மீண்டும் மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது.

இதேபோல நடிகர் விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சி அவர்கள் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் ரசிகர்கள் வாரிசு படத்திற்காகவும் துணைவி படத்திற்காகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் விஜயின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு திரைப்படம் ஒரே தினத்தில் வெளியாக உள்ளது என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று இந்த நிலையில் தற்போது ஃப்ரீ ரிலீஸ் பிசினஸ் குறித்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

துணிவு படத்தில் ஃப்ரீ ரிலீஸ் பிசினஸ் இதோ :-

160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது துணிவு திரைப்படம், இதில் நடிகர் அஜித்தின் சம்பளம் 70 கோடி, இந்த நிலையில் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமை 60 கோடி விற்பனையாகியுள்ளது, மேலும் கேரளா தியேட்டர் உரிமம் 2.50 கோடி ரூபாயும், கர்நாடகா தியேட்டர் உரிமை 3.50 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா தியேட்டர் உரிமை 1.50 கோடி விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஹிந்தி டப்பிங் உரிமம் 25 கோடி ரூபாய் வரை விலை போய் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

வாரிசு படத்தின் ஃப்ரீ ரிலீஸ் பிசினஸ் இதோ :-

வாரிசு படத்தை வெளிநாட்டு தியேட்டர் உரிமம் 14 கோடி ரூபாய்க்கும், ஆடியோ ரைட்ஸ் 2 கோடி ரூபாய்க்கும் விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓடிடி உரிமம் 70 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சாட்டிலைட் உரிமம் மற்றும் கலைஞர் டிவி 20 கோடி ரூபாய் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விஜயின் வாரிசு படத்தை விட அஜித்தின் துணிவு திரைப்படம் ஃப்ரீ ரிலீஸ்சுக்கு முன்பே ரூபாய் 200 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஃப்ரீ ரிலீஸ்ல் மட்டுமே 200 கோடி வசூலித்த துணிவு திரைப்படம் திரையரங்கில் வெளியானால் இன்னும் எவ்வளவு சம்பாதிக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.