தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய் இவர் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றி பெறமாக நடித்து முடித்துள்ளார். வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு திரைப்படமாக உருவாகி உள்ளது.
இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சரத்குமார், பிரபு, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு படம் மோத இருப்பதால் வாரிசு படக்குழு அடுத்தடுத்த வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது அந்த வகையில் அடுத்ததாக இசையில் வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த இருக்கிறது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 24 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது இதற்காக மிக பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருகிறதாம்..
இதுவரைக்குமே சுமார் 5 கோடி செலவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு மூன்று கோடிகள் செலவாகும் என சொல்லப்படுகிறது அதற்கும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை..
மிகப் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என சொல்லி உள்ளாராம் இதனால் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வேற லெவலில் இருக்கும் என சொல்லப்படுகிறது இது துணிவு திரைப்படத்திற்கு பயத்தை இன்னும் கூட்டி உள்ளதாம்.. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.