சினிமா உலகில் எப்பொழுதுமே போட்டிகள் அதிகம் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் அடுத்ததாக அஜித் – விஜய்.. ஆரம்பத்தில் பல தடவை மோதியிருந்தாலும் கடந்த எட்டு வருடங்களாக இவர்கள் இருவரும் தனங்களது படங்களை சோலோவாக இறக்கி வெற்றிகொண்டு வந்தனர் ஆனால் இந்த நேரம் தான் சரியான நேரம் எனக் கருதி அடுத்த வருடம் பொங்கலை..
குறிவைத்து ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்கின்றனர் இதில் யார் கை ஓங்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் பெரிதும் எதிர்நோக்கி இருக்கின்றனர். அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாக்கி உள்ளது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது.
நேற்று இந்த படத்தின் சில்லா சில்லா பாடல் இந்த படத்தின் அதிகரிப்பை இன்னுமே சற்று உயர்த்தி உள்ளது. இது இப்படி இருக்க மறுபக்கம் விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. வாரிசு – துணிவு இரண்டு படமும் வெளி வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் இருந்தாலும்..
அதற்கு முன்பாகவே திரையரங்குகளை கைப்பற்று வசூல் ரீதியாக ஜெயிக்கவும் பல முடிவுகளை கையாண்டு வருகின்றனர் அந்த வகையில் துணிவு திரைப்படத்தின் வசூலை விட வாரிசு படத்தின் வசூல் அதிகமாக இருக்க பல முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.. அதன்படி வாரிசு படத்தின் 3 சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட் விலை சுமார் 500 ரூபாய் இருக்கும் என முடிவு செய்துள்ளார்களாம்..
இதன் மூலம் வாரிசு படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விஜயின் வாரிசு படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது அஜித்தின் துணிவு திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்து இருந்து பார்ப்போம் வசூலில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை..