தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் அண்மைகாலமாக வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. இன்னும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்து தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்தார்.
படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெய சுதா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.
படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்ததால்.. ரசிகர்களை தாண்டி குடும்ப ஆடியன்ஸ்க்கு ரொம்ப பிடித்த போனதால் நல்ல வரவேற்ப்பை பெற்று தமிழகத்தில் வசூல் அள்ளி வருகிறது. மற்ற இடங்களிலும் விஜயின் வாரிசு திரைப்படம் நல்ல வசூலை அள்ளும் என படக்குழு கணித்தது ஆனால் ஏமாற்றமே மிச்சி உள்ளது.
தமிழை தாண்டி கேரளா, தெலுங்கு, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் விஜய் படங்கள் அசால்டாக அங்கு பல கோடியை அள்ளி விடும்.. ஆனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் வாரிசு படக்குழுவுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது வாரிசு படம் கேரளாவில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
தெலுங்கிலும் அதே போல தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் இதுவரை 12 கோடி வரை மட்டுமே அள்ளி உள்ளதாம். இதனால் வாரிசு படக்குழு சோகத்தில் இருக்கிறது. தமிழகத்தில் வாரிசு திரைப்படம் அதிக வசூலை அள்ளி நாளும் அங்கு துணிவு தான் முதலிடத்தில் வசிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.