வாரிசு திரைப்படம் இந்த திரைப்படத்தின் காப்பிய.? அல்லது ரீமேக்கா.? ரிலீசுக்கு ,முன்பே முழு கதையையும் கூறி சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்.! கிழித்து தொங்க விடும் விஜய் ரசிகர்கள்

varisu
varisu

கடைசியாக தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது இதற்கு முன்பு நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பே பீஸ்ட் திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானது அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர்  திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலை நாட்டியது அதனால் பீஸ்ட் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு இரண்டு மடங்காக ரசிகர்களிடையே அதிகரித்தது ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் திரைப்படம் கொடுக்கவில்லை.

அதற்கு நெல்சன் கதை போல் இல்லை என பலரும் குற்றம் சாட்டினார்கள். அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் திரைபடம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இயக்குனர் வம்சி பைடிபல்லி  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தளபதி 66 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.  படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு ,ஜெயசுதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள் அதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப பாங்கான கதை என பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில் விஜய் மிகவும் ஸ்டைலாக மாஸ் லுக்குடன் இருக்கிறார்.

படத்திற்கு டைட்டிலாக வாரிசு என  வைத்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் லைக்குகலை குவித்து  வருகிறது விஜய் ரசிகர்கள் போஸ்டரை கொண்டாடி வருகிறார்கள். இந்தநிலையில் சர்ச்சையை கிளப்பும் ப்ளூ சட்டை மாறன் தற்பொழுது வாரிசு திரைப்படத்தைப் பற்றி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சக்திவாய்ந்த கோடீஸ்வரர் கொல்லப்பட்டவுடன் அவரால் இரகசியமாக தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மகன் தனது சட்டபூர்வமாக உரிமையை நிரூபிக்க தனது தந்தையை கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து அவரது தொழில் மற்றும் சொத்துகளை அபகரிக்க விடாமல் விஜய் தடுப்பார் அதுதான் கதை வாரிசு பிரஞ்ச் திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் திரைப்படமா.? அல்லது இந்த திரைப்படத்தின் தழுவலா காப்பியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறன் அவர்களை விலாசி வருகிறார்கள் அது மட்டுமில்லாமல் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து எப்படி முழு கதையையும் முடிவு செய்யலாம் எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் மேலும் ஒரு சில விஜய் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள்.

varisu
varisu