தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சி விஜய் வைத்து வாரிசு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்திற்கு தாமன் தான் இசையமைத்து வருகிறார். படத்தை தில் ராஜி தயாரித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படபிடிப்பில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது அதுமட்டுமில்லாமல் அதனால் பட குழு படப்பிடிப்பில் மொபைல் போன் யூஸ் பண்ண கூடாது என கண்டிஷன் போட்டார்கள் ஆனால் அதையும் தாண்டி அடிக்கடி படபிடிப்பிலிருந்து புகைப்படம் வெளியாகி கொண்டே இருந்தது.
சமீபத்தில் கூட ஒரு பாடலின் 30 நிமிடக் காட்சியும் மருத்துவமனை காட்சியும் இணையதளத்தில் லீக் ஆனது. மேலும் இந்த திரைப்படத்திலிருந்து ஒவ்வொரு காட்சிகளையும் வெளியானதால் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள். இந்த திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த பாடலின் பிரமோ வீடியோ வெளியாக்கியது ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வரி இந்த பாடலிலும் இடம் பெற்றுள்ளது இந்த பாடல் இணையதளத்தில் வெளியானாலும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்று பெற்றாலும் நெட்டிசன்கள் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் படத்தின் வாரிசு பாடலை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள் ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியாகிய ஒஸ்தி திரைப்படத்திலிருந்து தமன் அமைத்த பாடலான வாடி வாடி என்ற பாடலின் இசையை அட்ட காப்பி அடித்துள்ளார் தமன் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். விஜயின் வாரிசு திரைப்படத்தையும் கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.
யோ தமணு நீ பெரிய ஆளுயா😂😂😂
ரஞ்சிதமே ரஞ்சிதமே 😂😂😂 pic.twitter.com/doJOjxiFgp
— காக்கா (@kaka_offic) November 4, 2022