வாரிசு படத்தில் மெயின் வில்லன்னாக நடித்துள்ளது இவரா.? வெளிவந்த உறுதியான தகவல்

vijay
vijay

தளபதி விஜய் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்திக் கொள்ள தமிழ் தாண்டி மற்ற மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் முதலாவதாக தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றி கரமாக நடித்து முடித்துள்ளார் இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.

இந்த படத்தை தில் ராஜூ பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளார் படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகி இருக்கிறதாம் இதில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்திருக்கிறார் படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆகிறது

இந்த படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் ரேசில் கலந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது இந்த நிலையில் வாரிசு பட குழு ஒரு படி மேலாக போய்..

நேற்று சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் ஆடியோ லாஞ்சை பெரிய அளவில் நடத்தியது. வாரிசு படத்தில் நடித்த முக்கிய நடிகர் நடிகைகள் மற்றும் திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது அப்பொழுது பல பிரபலங்கள் பேசிய நிலையில் ஒரு கட்டத்தில் பிரகாஷ் ராஜ் பேசினார் அவர் சொன்னது என்னவென்றால்..

வாரிசு திரைப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன் என அவரே தெரிவித்தார் மேலும் பேசிய அவர் வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.