“வாரிசு திரைப்படம்” குடும்ப செண்டிமெண்ட்டான கதை கிடையாது.? அதுக்கும் மேல.. ரகசியத்தை உடைத்த சரத்குமார்.!

vijay
vijay

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி பட குழு நகர்ந்து உள்ளது இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார்.

வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப படமாக உருவாகுவதாக தயாரிப்பாளர் ஏற்கனவே கூறினார். அதன்படி படத்தின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, சரத்குமார், பிரகாஷ்ராஜ், மனோபாலா, ஷாம் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

வாரிசு திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் இந்த படத்தை தாண்டி கிட்டத்தட்ட ஏழு எட்டு படங்களில் நடித்து வருகிறார் குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பளுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சரத்குமார் வாரிசு திரைப்படம் குறித்தும் விஜய் குறித்தும் பேசி உள்ளார்.

விஜய் நடிப்பு திறமை மற்றும் பொறுமை தன்னை மிகவும் கவர்ந்து உள்ளதாக பேசினார் மேலும் வாரிசு படம் ஒரு பவர்ஃபுல்லான கதை களத்துடன் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார். வாரிசு திரைப்படம் பேமிலி டிராமா மட்டுமில்லை அதில் ஆக்சன், காமெடி, என்டர்டைன்மெண்ட், சாங், ஃபைட் என இந்தப் படம் ஒரு கூட்டு கலவையான சிறந்த படமாக உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி என்றால் நிச்சயம் இந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைய இருப்பதாக தெரிய வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் தற்பொழுது இந்த தகவலை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் இந்த தகவலை பகிர்ந்தும் வருகின்றனர்.