தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை வம்சி இயக்கி உள்ளார் தில் ராஜு மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருக்கிறார் வாரிசு படத்தில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார்.
அவருடன் கைகோர்த்து பிரகாஷ்ராஜ் சரத்குமார் போன்ற டாப் ஜாம்பவான்கள் நடித்திருக்கின்றனர் இந்த படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது தெலுங்கில் மட்டும் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது படம் வெளிவர இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது.
அதனால் ரசிகர்கள் பலரும் கட்டவுட் பேனர் தளபதிக்கு வைத்து அசத்தி வருகின்றனர் இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது ஆம் வாரிசு படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் வாரிசு திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை கூறியுள்ளார்.
அதில் அவர் சொல்லி உள்ளது இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் வைரல் ஆகி வருகிறது அவர் சொன்னது என்னவென்றால். வாரிசு படத்தின் கதையில் புதுமை இல்லை இருப்பினும் சுவாரஸ்யமாக இருக்கிறது. படத்தின் நீளம் தான் மைனஸ்.. படத்தின் முதல் பாதியில் சில காட்சிகளை நீக்கி இருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்.
மொத்த படத்தையும் விஜய் தான் தூக்கி சுமக்கிறார். மொத்தத்தில் வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் சூப்பரான படம். விஜய்க்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை கொடுக்கக்கூடிய திரைப்படமாக வாரிசு திரைப்படம் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த தகவல் உண்மையா என்பது தெரியவில்லை ஆனால் தளபதி ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.