சினிமா உலகில் நல்ல நண்பர்களாக இருக்கும் நடிகர்கள் கூட படங்கள் என்று வந்துவிட்டால் யார் மாஸ் என தெரிந்து கொள்ள போட்டி போடுவது வழக்கமாக வைத்திருக்கின்றனர் அந்த வகையில் ரஜினி, கமலை தொடர்ந்து அஜித், விஜய் தொடர்ந்து மோதிக் கொண்டு தான் இருக்கின்றனர் அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பொங்கலை முன்னிட்டு..
அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் களம் இறங்கின இரண்டு திரைப்படங்களும் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டு படம் ரிலீஸ் ஆனது துணிவு திரைப்படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் மக்கள் தற்பொழுது வரை திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர்.
ஆனால் வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து துணிவு திரைப்படத்தின் வசூல் சற்று அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது கிடைத்துள்ள வசூல் நிலவரப்படி இரண்டு படங்களுமே தமிழகத்தில் சமமான வசூலை அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படக்குழு அண்மையில் சக்சஸ் பார்ட்டி ஒன்று வைத்தது அதில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்படப்பாளர் கலந்து கொண்டனர். வாரிசு படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது அப்பொழுது பேசிய சரத்குமார்..
வாரிசு திரைப்படம் 100 நாட்கள் ஓடும் என தெரிவித்தார் மேலும் தரமான படங்களுக்கு அழகாக விமர்சனம் எழுதுங்கள் ரசிகர்களே படம் பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும் உங்களின் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள் என சினிமா விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே சரத்குமார் விஜய் சூப்பர் ஸ்டார் என கூறியது பெரிய அளவில் விமர்சனமான நிலையில் தற்போது இதுவும் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.