இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. என்னதான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் விமர்சகர்களிடம் இந்த படம் தப்பவில்லை. அந்த வகையில் வாரிசு படம் ஒரு அப்பட்டமான காப்பி அடிக்கப்பட்ட படம் என்று சினிமா பிரபலம் ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் நடிகர் மற்றும் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் வாரிசு படம் குறித்து விமர்சனம் செய்த வீடியோவை தனது youtube பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் சரத்குமாருக்கும் ஜெயசுதாவிற்கும் பிறக்கும் மூன்றாவது மகன் விஜய் இவர் தனியாக ஒரு தொழில் செய்து வருகிறார்.
அப்போது விஜயின் அப்பா சரத்குமார் அவர்களுக்கு கடுமையான நோய் ஒன்று பாதிக்கிறது அதனால் ஜெயசுதா தனக்கும் தனது கணவருக்கும் அறுபதாம் கல்யாணம் நடக்க ஜெயசுதா ஆசைப்படுகிறார்.
ஏழு ஆண்டுகளாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த விஜய் தற்போது வீடு திரும்புகிறார். அதன் பிறகு தனது அப்பாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த இவர்கள் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதே மீதி கதை. இதில் நடிகர் விஜய் அவர்கள் நீண்ட நாட்கள் கழித்து ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளார்கள்.
அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் ரகுவரனை போலவே நடித்துள்ளார் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அது மட்டுமல்லாமல் இந்த படம் புரியாதவர்களுக்கு கடைசி காட்சிகளில் கண்ணீர் தண்ணி வந்துவிடும் அந்த அளவிற்கு வம்சி வாரிசு படத்தில் நடித்த நடிகர்களிடம் இருந்து அவர்களுடைய திறமையை அழகாக பறித்துக் கொண்டார்.
இந்த நிலையில் வாரிசு படம் முழுக்க முழுக்க சிவாஜி படத்தின் அட்டகாபி தான் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படிக்காத மேதை படத்தின் அட்டகாபி தான் வாரிசு படம் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.