தளபதி விஜய் தனது இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் ஹீரோவாக பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த ஒவ்வொரு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் விஜய்.
விஜய் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படமும் கதை எப்படி இருக்கிறதோ அது இரண்டாம் பட்சம் ஆனால் விஜய்காகவே அவரது படத்தை பார்க்க கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கதை அம்சம் மக்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும் வசூல் சிறப்பாக நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. படத்தில் விஜயுடன் இணைந்து ஹீரோயினாக முதல் முறையாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்தின் மற்ற கதாபாத்திரத்தில் குஷ்பூ, ஷாம், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா, சங்கீதா, எஸ் ஜே சூர்யா போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.
வாரிசு படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு தீவிரமாக நடந்து வந்தது. அப்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் கூட சமூக வலைதளங்களில் கசிந்தது. இந்த நிலையில் வாரிசு படத்தை பிரமாண பொருள் செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார். இவர் இந்த படத்தை சிறப்பாக தயாரித்து முடித்து அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியிடுவார் என தெரிய வருகிறது.
வாரிசு படத்தில் முதற்கட்ட சூட்டிங் முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட சூட்டிங் நடந்து வருவதாக தெரிய வருகிறது. இப்படி படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நான்கு நாள் விஜயின் கால் சீட் வீணாகி போய்விட்டதாம். இதனால் விஜய் ரொம்ப வருத்தத்தில் இருந்தாராம். பின்பு இயக்குனர் வம்சி அந்த ஷூட்டிங் காட்சிகளை இரண்டே நாளில் முடித்து அசத்தி உள்ளாராம்.