தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சி இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த வாரிசு திரைப்படத்தில் விஜியுடன் இணைந்து ராஷ்மிகா மந்தானா மற்றும் பிரபு, பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் திரைப்படமாக உருவாகி உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்திலிருந்து பல போஸ்டர்கள் இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தில் அமைந்துள்ள தீ தளபதி மற்றும் ரஞ்சிதம் ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. ஆனால் இந்த படத்திற்காக பல லட்சங்கள் செலவு செய்து படகுழு பிரமோஷன் செய்தது. அதிலும் குறிப்பாக கபாலி படத்தின் பிரமோஷனுக்காக போஸ்டர் ஒட்டப்பட்ட விமானத்தின் மூலம் படத்திற்காக பிரமோஷன் செய்தது படகுழு.
அதேபோல தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படத்திற்காக ரஜினியின் பாணியிலேயே சென்று உள்ளார் விஜய். அதாவது கபாலி படத்திற்காக விமானத்தின் மூலம் பிரமோஷன் செய்தது போல வாரிசு படத்திற்க்காக மின்சார ரயில் மூலம் பிரமோஷன் செய்திருக்கிறது வாரிசு பட குழு.
அதாவது வாரிசு போஸ்டர்கள் ஒட்டப்பட்ட மின்சார ரயில் மூலம் வாரிசு படத்தின் பிரமோஷன் செய்து வருகிறது படக்குழு. இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க இதை விட ஆடம்பரமாக பிரமோஷன் செய்த கபாலி படமே தோல்வியில் தான் போய் முடிந்தது என்று கூறி வருகிறார்கள்.
மேலும் வாரிசு படக்குழு மின்சார ரயிலில் போஷ்டர்களை ஒட்டி பிரமோஷன் செய்துள்ளது மேலும் ரஜினியின் கபாலி படம் போல் விமானத்திலும் போஷ்டர்களை ஒட்டி பிரமோஷன் செய்ய வாரிசு படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ…
The Boss Returns 🔥
Chennai Metro Carries #Varisu 🚝🔥#Varisu in theatres near you from Pongal 2023 😊#Thalapathy @actorvijay @SVC_official @directorvamshi@iamRashmika @MusicThaman@Jagadishbliss #VarisuPongal 🔥 pic.twitter.com/uLdsSd0xiR
— Seven Screen Studio (@7screenstudio) December 12, 2022