இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தும் “வாரிசு” படக்குழு..! எந்த தேதியில் தெரியுமா.?

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் அண்மை காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அந்த படம் ஒட்டுமொத்தமாக 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.

இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ஜெயசுதா, குஷ்பூ, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. மாஸ்டர் பீஸ்ட் படத்தை போல இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் குறித்து ஏதேனும் அப்டேட் வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதன்படி ஒரு தகவலும் நமக்கு கிடைத்துள்ளது அதாவது தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்தாலும் அதற்கு முன்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை..

மிகப் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் எங்கு என்று தெரியவில்லை இருந்தும் தேதி மட்டும் தற்போது நமக்கு கிடைத்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் வாரிசு திரைப்படம் இசை விட்டு விழா டிசம்பர் 4 அல்லது 11 ஆகிய தேதிகளில் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.