தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் கடைசியாக நடித்த [பீஸ்ட், வாரிசு போன்ற படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளிவந்தன. அதனை தொடர்ந்து தளபதி விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ”..
திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறதாம். படத்தில் விஜயுடன் கைகோர்த்து சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி..
மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகின்றனர். படத்தின் இரண்டு கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் துவங்கப்பட இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஜய் பற்றியும் லியோ திரைப்படம் குறித்தும் பல்வேறு தகவல்கள் கசிந்த வண்ணமே இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது வாரிசு திரைப்படம் உண்மையில் லாபமா.. நஷ்டமா.. என கேள்வி கேட்கப்பட்டது இதற்கு பதிலளித்த நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் வாரிசு திரைப்படம் வினியோஸ்தர்களுக்கு நஷ்டம் தான் எனக் கூறியிருக்கிறார்.
விஷயத்தை கேள்விப்பட்ட பலரும் வாரிசு திரைப்படம் வினியோஸ்தர்களுக்கு நஷ்டமான படம் எனக் கூறிய சமூக வலைதள பக்கத்தில் வைரலாக்கி வருகின்றனர். வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்ட வந்த நிலையில் தற்போது இந்த தகவல் பெரும் பரபரப்பை கிளம்பி உள்ளது இதற்கு பட குழு சைடுலிருந்து பதில் வந்தால் மட்டுமே எது உண்மை என்பது தெரியும்..