இந்த காட்சிக்காக மட்டுமே பல கோடி செலவு செய்த வாரிசு பட தயாரிப்பாளர்.. தலை சுற்றிப்போன பிரம்மாண்ட இயக்குனர்கள்.

thil-raju-
thil-raju-

சினிமா புதியதை நோக்கி நகர நகர பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் உருவாகி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கின்றன. குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், ராஜமௌலி போன்றவர்கள் படத்தை 500 கோடி செலவில் எல்லாம் எடுக்கின்றனர் அந்த படங்களும் வெளிவந்து வெற்றி பெறுகின்றன.

ஆனால் ஒரு சில திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் ஒரு சில காட்சிகளுக்காக கோடிகளை அள்ளி கொடுப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் நாம் பார்க்க இருக்கிறோம் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் அமைந்து இருந்தது ரசிகர்களுக்கு இது ரொம்ப பிடித்ததால் படம் வசூலை வாரி குவித்து வருகிறது இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், சரத்குமார், பிரபு, யோகி பாபு என மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்திருந்தது இந்த படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியது இந்த படத்தில் விஜய்க்கு சம்பளம் மட்டுமே 120 கோடி மற்ற நடிகர்களும் பல கோடிகளை சம்பளமாக வாங்கினார்கள்.

மீதி பட்ஜெட்டில் தான் படம் உருவாகியது இந்த திரைப்படத்தில் ஒரு பிரம்மாண்ட வீடு காட்டப்பட்டிருக்கும்.. இந்த வீட்டின் செட் போட எவ்வளவு செலவானது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது பிரம்மாண்ட வீடு திரையரங்கில் பார்ப்பதற்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும் மிகப்பெரிய கூரை, அகலமான இடம், பெரிய படிக்கட்டுகள் மற்றும் விலை மதிப்பில்லாத அலங்கார பொருட்கள் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வாரிசு படத்தில் வரும் வீட்டின்  செட்டின் செலவு மட்டுமே சுமார் 10 கோடி ஆனதாம். உண்மையில் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டி இருந்தாலே 10 கோடி தான் வந்திருக்கும் ஆனால் வாரிசு படத்தில் அந்த வீட்டின் செட்டுக்கு மட்டுமே 10 கோடி தயாரிப்பாளர் தில் ராஜு செலவு செய்தார்.  இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள்.. இவ்வளவு செலவு செய்த ஒரே ஒரு தயாரிப்பாளர் தில் ராஜு தான். இப்படி பார்த்து பார்த்து பட்ஜெட் போட்டு பண்ணியும், கதை மட்டும் பழையதாக யோசித்து தயாரித்து விட்டார் என கூறி வருகின்றனர்.