என்னடா இது.? விஜய்க்கு வந்த சோதனை.. முக்கிய இடத்தில் வாரிசு மோசமான வசூல்

vijay
vijay

கோடான கோடி ரசிகர்களை தனது நடிப்பு திறமையின் மூலம் இழுத்து போட்டவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி கோலாகலமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. வாரிசு படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் பார்க்கும் படமாக இருப்பதால்..

தற்பொழுது இந்த படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதன் காரணமாக வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த பணமே இருக்கிறது இப்படி இருக்கிறது மூன்று நாள் முடிவில் வாரிசு திரைப்படம் 40 கோடி வரை வசூலித்து உள்ளது. வருகின்ற நாட்களில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் வசூல்  அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்பொழுது பட குழுவினர்களை சந்தோஷப்பட வைத்துள்ளது அண்மையில் கூட இயக்குனர் வம்சி தயாரிப்பாளர் தில் ராஜு  நடிகர் விஜய் சந்தித்து படத்தின் வெற்றியை கொண்டாடினர். அதன் புகைப்படம் வைரலானது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு முக்கிய இடத்தில் மட்டும் விஜயின் வாரிசு திரைப்படம் வசூலில் திணறிக்கொண்டு இருக்கிறது.

இது குறித்து நாம் விலாவாரியாக பார்ப்போம்.. விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டி கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற இடங்களில் நல்ல வரவேற்பு இருக்கிறது அங்கேயும் தற்பொழுது நல்ல வசூலை அள்ளி உள்ளது ஆனால் ஹிந்தியில் மட்டும் வாரிசு படத்தின் வசூல் குறைந்துள்ளது முதல் நாள் வசூல் மட்டுமே 80 லட்சம் வரை வந்துள்ளதாம்..

வருகின்ற நாட்களில் ஹிந்தியில் வாரிசு திரைப்படம் Diasaster திரைப்படமாக அங்கு அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் அதிகம் வந்த வண்ணமே இருக்கின்றன. பொறுத்து இருந்து பார்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..