அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த வாரிசு பட நடிகை.! இப்ப நினைச்சு கூட ரொம்ப வருத்தப்படுறாராம்.

ajith-
ajith-

அண்மைக்காலமாக தளபதி விஜய் தொடர்ந்து ஆக்சன் படங்களை கொடுத்து வந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு குடும்ப செண்டிமெண்ட் கதைகளம் உள்ள ஒரு படத்தில் நடித்துள்ளார் அந்த படம் தான் வாரிசு. இந்த படத்தை வம்சி தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கியுள்ளார்.

படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இந்தப் படம் விஜய் கேரியரில் ஒரு முக்கிய படமாக மாறி உள்ளது. ஏனென்றால் இந்த படம் ஒரு குடும்பம் சென்டிமென்ட் மட்டும் இல்லாமல் ஆக்சன் காமெடி போன்ற அனைத்தும் இடம்பெற்று மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

அதனால் இந்த படம் ஒவ்வொரு நாளும் அதிக வசூலை அள்ளி 150 கோடிக்கு மேல் தாண்டி உள்ளது. இதனால் பட குழுவும் சரி விஜய் ரசிகர்களும் சரி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதனைக் கொண்டாடும் வகையில் அண்மையில் இந்த படத்தின் வெற்றி விழாவும் நடைபெற்றது அதில் விஜய் உட்பட சிலர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த நிலையில் வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக பிரபல நடிகை ஜெயசுதா நடித்திருந்தார். இவரது நடிப்பு இந்த படத்தில் செம்ம சூப்பராக இருந்தது என பலரும் கூறினர். தற்போது ஜெயசுதா குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது ஆம் இவர் அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்டு உள்ளாராம். அதனை அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.

எந்த படம் என்பதை பார்ப்போம். அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த வலிமை திரைப்படத்தில் அஜித்தின் அம்மா ரோலில் நடிக்க முதலில் ஜெயசுதா தாம் ஒப்பந்தம் ஆனார். அந்த நேரத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என கூறியுள்ளார்.