தில் ராஜுவை பார்த்து விஜய் ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்.. சற்று நேரத்தில் அதிர்ந்த வாரிசு “audio launch”

varisu
varisu

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் அசால்டாக 200 கோடி வசூல் அள்ளிவிடும் அந்த வகையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என இப்பொழுது பேசப்பட்டு வருகிறது.

காரணம் படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி ஆடியன்ஸை கவர்ந்து இழுக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த படத்தில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக செம்ம மாஸ் ஆக நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர திரை பட்டாளமே நடித்திருக்கிறது.

இதனால் இந்த படம் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது படம் அடுத்த வருடம் பொங்கலை  முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. வாரிசு வெளிவர இன்னும் சில நாட்களே இருப்பதால் ரசிகர்களையும் மக்களையும் துள்ளலாட்டம் போட வைக்க வாரிசு படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை கொடுத்த வண்ணமே இருக்கிறது.

கடைசியாக அம்மா பாடல் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் நேற்று சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக அரங்கேறி முடிந்தது இந்த இசை விழாவில் மேடை கொஞ்சம் வித்தியாசமாக போடப்பட்டுள்ளது அதாவது நிகழ்வுக்கு வரும் பிரபலங்கள் அனைவரும் மக்களைப் பார்த்து கையை அசைத்திட்டு வருமாறு மேடைகள் அமைக்கப்பட்டிருந்ததாம்

விஜய் பச்சை கலர் டிரஸ்சில் வந்து ரசிகர்களை சந்தித்து கையை அசைத்து பின் வணக்கம் வைத்து சென்றார் அது பெரிய அளவில் வைரலானது அதனைத் தொடர்ந்து பல பிரபலங்கள் வந்தனர் ஒரு சமயத்தில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வந்தார் அப்பொழுது விஜய் ரசிகர்கள் அவரை பார்த்து நம்பர் ஒன் நம்பர் ஒன் என கூச்சலிட்டனர். ஏற்கனவே நம்பர் ஒன் என்று சொல்லித்தான் தில் ராஜூ மிகப்பெரிய ஒரு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.