தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் வாரிசு இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரித்து இருக்கிறார். வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது ஆம் அதுவும் தமிழை தாண்டி தெலுங்கிலும் பெரிய அளவில் ரிலீஸ் ஆகுவதால் முதல் நாளே பிரமாண்டமான வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு திரைப்படமும் மிகப் பிரமாண்டமாக தமிழ் தெலுங்கு ஆகிய இடங்களிலும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரேசியில் யார் ஜெயிக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள மக்களும் ரசிகர்களும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு பட குழு அதிரடியான அப்டேட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து வருகிறது.
அந்த வகையில் வருகின்ற 24-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதற்கு பல முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர் தொடர்ந்து இது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
அதில் ஒன்றாக வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எந்த சேனலில் ஒளிபரப்பாகிறது என்பது குறித்தும் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்சை நீங்கள் சன் டிவியில் கண்டு களிக்கலாம் இதோ அந்த அதிகாரபூர்வமான அறிவிப்பை நீங்களே பாருங்கள்.