வாரிசு மற்றும் துணிவு படத்தை ஒரே நிறுவனம் தான் வெளியிடுகிறது.! வெளியான தகவல்…

varisu-thunivu
varisu-thunivu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது மேலும் படத்தில் சண்டை காட்சிகள் மட்டும் மீதமுள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் அவர்கள் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது மேலும் நடிகர் அஜித் அவர்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் தாய்லாந்திருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மேலும் துணிவு படத்தில் உள்ள மீதும் காட்சிகளை டூப் வைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும்  வெளியிட உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அண்மையில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து வாரிசு திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மறைமுகமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தமிழகம் முழுவதும் வெளியிட்டது.

அதேபோல் தற்போதும் வாரிசு திரைப்படத்தையும் துணிவு திரைப்படத்திற்கும் சரிசமமாக திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொங்கல் தினத்தில்  அஜித்தின் துணிவும் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஒன்றோடு ஒன்று மோத உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் கடைசியாக ஜில்லா வீரம் இந்த திரைப்படத்தின் மூலம் மோதிக்கொண்ட இருவரும் தற்போது துணிவு வாரிசு படத்தின் மூலம் மீண்டும் மோத உள்ளனர். இதில் எது வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.