வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றிநடை கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
இதுவரை மட்டுமே 250 கோடிக்கு மேல் அள்ளி உள்ளது இருப்பதாக தயாரிப்பு சைடில் இருந்து வெளி வருகிறது தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களான ஹிந்தியில் 12 கோடி வசூல் வழியாகவும் தெலுங்கில் 22 கோடி வசூல் செய்தாக தகவல்கள் வெளிவந்தன இந்த நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் வாரிசு திரைப்படத்தின் வசூல் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.
ஹிந்தியில் 12 கோடி கலெக்ஷன், தெலுங்கில் 22 கோடி கலெக்ஷன் என கூறுகிறார்கள் இது உண்மையான கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் வாரிசு திரைப்படம் ஹிந்தியில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து சரியாக தெரியவில்லை ஆனால் தெலுங்கில் வாரிசு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது எனக்கு தெரியும்..
இன்று காலையில் கூட ஒரு தெலுங்கு தயாரிப்பாளரிடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்தேன். மாஸ்டர் திரைப்படம் தெலுங்கில் எவ்வளவு கோடி வசூல் செய்து இருந்ததோ அதைவிட 5 கோடி குறைவு என கூறினார்.
ஆனால் என்ன காரணத்தினாலையோ மிக அதிகமான தொகையை வசூல் செய்து இருப்பதாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார் ஏன் இப்படி அவர் சொல்கிறார் என தெரியவில்லை.. எனவும் அந்த தெலுங்கு தயாரிப்பாளர் என்னிடம் கூறி ரொம்ப வருத்தப்பட்டார் என பதில் அளித்தார்.