சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் பலரும் பிற மொழிகளில் தான் கொடிகட்டி பறப்பார்கள் அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட பெண்ணாக இருந்தாலும் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தது என்னவோ தெலுங்கில் தான்.
கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்ததால்.. தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறினார் அதன் காரணமாக பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது குறிப்பாக தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் வந்த வண்ணமே இருக்கின்றன.
தமிழில் ராஷ்மிகா மந்தனா சுல்தான் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் ஆனால் முதல் படமே இவருக்கு மிகப்பெரிய ஒரு தோல்வி படமாக அமைந்தது. அதனால் தமிழ் சினிமா எனக்கு பிடித்திருக்கிறது நான் இரண்டாவது படத்தில் நடிப்பதற்கு நல்ல கதை இருந்தால் மட்டுமே நடிப்பேன் எனக் கூறியிருந்தார் இந்த நிலையில் தான் இயக்குனர் வம்சி சொன்ன வாரிசு படத்தின் கதை ரொம்ப பிடித்து போகவே..
உடனே ஓகே சொன்னார் அதுவும் விஜய்யுடன் என்பதால் செம்ம சந்தோஷத்தில் நடித்து வருகிறாராம் இந்த படத்தின் நான்காவது கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இப்படி சினிமா உலகில் வெற்றிகளை கொடுத்தாலும் ரசிகர்களும் தனக்கு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டு அசத்துவதிலும் கைதேர்ந்தவர்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா துளி கூட மேக்கப் இல்லாமல் எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் கூட செம அழகாக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.