நடிகை சமீராரெட்டி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். சினிமா வாழ்க்கையை 2002ஆம் ஆண்டு ஹிந்தி சினிமா மூலம் தொடங்கினார். அதன்பிறகு தமிழில் 2008ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகிய வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பிறகு 2002ஆம் ஆண்டு வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல் அஜித்துடன் அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் தமிழில் இவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் முனி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியவில்லை இந்தநிலையில் 2014ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமீரா ரெட்டி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்.
இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படம் மற்றும் தன்னுடைய குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படம் வீடியோ என எதையாவது பதிவிட்டு வருவார். அது மட்டுமில்லாமல் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர் அதனால் ஜிம் ஒர்க் அவுட் வீடியோவை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் தலைமுடி அனைத்தும் நரைத்துப் போய் வயதான தோற்றத்துடன் காணப்படுகிறார் இதை பார்த்த ரசிகர்கள் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் க்யூட்டாக நடித்த சமீராவா இப்படி இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.