உலக அழகி ஐஸ்வர்யா ராயை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட வரலட்சுமி சரத்குமார்.! இந்த அதிசயம் நடக்க ஒரு நடிகர் தானாம்.

aishwarya-rai-and-varalaxmi

சினிமா உலகில் வெற்றி பெற்ற ஒரு சில பிரபலங்களை காண நடிகர்களும் மக்கள் கூட்டமும் ஆர்வமாய் இருப்பார்கள் அந்த வகையில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயை பார்க்க இன்றளவும் ஒரு மிகப்பெரிய ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது அதற்கு காரணம் அவரது அழகு மற்றும் திறமை என கூறப்படுகிறது.

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையான இவர் பெரும்பாலான படங்கள் அங்கு நடித்திருந்தாலும் தமிழில் ரஜினி பிரசாந்த் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து மொழிகளிலும் அவ்வப்போது தலை காட்டி உள்ளதால் இவருக்கு இந்திய அளவிலும் உலக அளவிலும் மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளம் இன்று வரையிலும் இருந்து வருகிறது.

இப்படி இருக்க தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத் குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர்கள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குடும்பத்தினரை சமிபத்தில் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து தற்போது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் எடுக்கப்பட்டு வருவதால் தனது குடும்பத்துடன் அங்கு தங்கியுள்ளார் இந்த நிலையில் சரத்குமார் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இன்றும் அவரது குழந்தைகளை சந்தித்து நேரில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

aishwarya rai
aishwarya rai

சரத்குமாருடன் இணைந்து அவரது மகள் வரலட்சுமி சரத்குமாரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமார் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  அந்த காரணத்தினால் முலம் சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஐஸ்வர்யா ராயை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.

aishwarya rai
aishwarya rai