தனது மேக்கப் மேனுக்கு பிறந்தநாள் பரிசாக விலை உயந்த பரிசை வழங்கிய வரலட்சுமி.!

தனது கம்பீரமான பேச்சின் மூலம் தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக நடித்து வரும் நடிகை தான் வரலட்சுமி இவர் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு கை கொடுத்து விட்டதால் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கதாநாயகியாக நடித்த பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவர் ஒரு சில திரைப்படங்களில் வில்லி போன்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் இவர் நடித்த வில்லி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

மேலும் இவர் தெலுங்கில் கோபி சந்த் மாலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தமிழைத் தவிர்த்து ஒரு சில மொழித் திரைப்படங்களிலும் நடித்து தற்போது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே போகிறதாம்.

அதேபோல் இவர் நிறைய புகைப்படங்களையும் சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மேக்கப்மேன் ரமேஷின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு கிப்ட் கொடுத்துள்ளதை இவர் பகிர்ந்துள்ளார்.வரலட்சுமி தனது மேக்கப்மேன் ரமேஷின் பிறந்தநாளிற்கு அவருக்கு ஒரு புதிய காரை வாங்கி பரிசாக வழங்கியுள்ளாராம்.

இதனை பதிவிட்டு நீ என் ஒப்பனை நாயகன் மட்டுமல்ல நீ என் வலதுகை நீ இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது என அவரது பிறந்தநாளிற்காக ஒரு காரை வாங்கி அன்பளிப்பாக தந்துள்ளார்.இதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பொழுது இவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உங்களது நல்ல மனம் நீங்கள் நிறைய திரைப்படங்களில் நடிக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.