கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமாரா இது.? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

varalaxmi
varalaxmi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவரைத் தொடர்ந்து அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் சினிமா உலகில் ஹீரோயின், வில்லி, கெஸ்ட் ரோல், குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் தனது திறமையை வெளிகாட்டி நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

இருப்பினும் அதன் காரணமாக வரலட்சுமி சரத்குமாரின் சினிமா பயணம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலட்சுமி சரத்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன்பின் இவர் தேர்ந்தெடுத்து நடித்த விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, சர்க்கார் போன்ற திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறின தற்போது கூட பல்வேறு புதிய படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இப்படி இருந்தாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுக்கும் வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

இதனால் வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் அண்மையில் ஹைதராபாத்தில் தனது தந்தை சரத்குமார் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவரே கூறிய வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது மேலும் தற்போது சற்று மெலிந்து போய் தான் காணப்படுகிறார்  நடிகை வரலட்சுமி சரத்குமார். வீடியோவை பார்த்த ரசிகர்களே தற்போது அதிர்ச்சியில் தான் இருந்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.