தல அஜித் ரசிகர்களை சீண்டிய வரலட்சுமி சரத்குமார்.! ரணகளமாகும் சமூகவலைதளம்.

varalaxmi-
varalaxmi-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் சினமா பயணத்தை ஆரம்பத்திலிருந்தே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்திலேயே வளரத் தொடங்கினார் அதுமட்டுமில்லாமல் சிறப்பான கதை களம் இருந்தால் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க கூட நடிகையாக தற்போது வரையிலும் இருந்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் நாயகியாகவும் வில்லியாகவும் மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் தளபதி விஜய் உடன் இணைந்த சர்க்கார் என்ற திரைப்படத்தில் அவருக்கு வில்லியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இவர் சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாக பேசக்கூடிய நடிகையாக தற்போதுவரை இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 7 தேதி தோனியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் காமன் டிபி ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் டோனியை பற்றி சில பதிவுகளை குறிப்பிட்டிருந்தார் அவர் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் அஜித் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கோபம் அடைய செய்துள்ளது.

அந்த பதிவில் அவர் தல தோனி என மென்ஷன் பண்ணி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தல அஜித் ரசிகர்கள் வரலட்சுமி இந்த பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் தலனா அது அஜித் மட்டும் தான் முதல்ல அத தெரிஞ்சிட்டு வந்து பேசி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.