தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய் இவர் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் வசூலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது அதுமட்டுமில்லாமல் விஜய்யின் திரைப்படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் இடமும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். தளபதி விஜயின் பீஸட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து என்ற பாடல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியானது.
இந்த பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு பல சினிமா பிரபலங்கள் மற்றும் பிரபலங்கள் நடனமாடி ரீல் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் சமந்தா, பூஜா ஹெக்டே, டிடி, யாஷிகா ஆனந்த், கௌரி கிஷன் என பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள் அது மட்டுமில்லாமல் விளையாட்டு வீரர்கள் சின்னத்திரை நடிகைகள் என பலரும் இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள்.
அப்படி இருக்கும் வகையில் தற்போது விஜய்யுடன் சர்க்கார் திரை படத்தில் நடித்த நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய செல்ல நாய்க்குட்டி உடன் அரபு குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவிட்டுள்ளார். வீடியோ பதிவு இட்டவுடன் பல ரசிகர்கள் லைக் செய்து ஷேர் செய்து வருகிறார்கள்.
இவர் வெளியிட்ட வீடியோவிற்க்கு ராதிகா சரத்குமார் அவர்களும் லைக் செய்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதொ அவர் வெளியிட்ட வீடியோ.