முதல் முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க போகும் வரலட்சுமி.! அதரவாக நிற்கும் ரசிகர்கள்.

varalaxmi
varalaxmi

சினிமாவுலகில் ஒரு நடிகர்தான் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தேர்ந்தெடுத்து நடிப்பார்கள் ஆனால் அவர்களுக்கு ஈடு இணையாக தற்பொழுது பயணிப்பவர் தான் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் ஆரம்பத்தில் ஹீரோயினாக அடி எடுத்து வைத்திருந்தாலும் அதன்பிறகு இவர் முற்றிலுமாக தன்னை மாற்றி கொண்டு முக்கியத்துவம் உள்ள கதைகளில் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் நடிக்க ஆர்வம் காட்டினார். அந்த வகையில் பல படங்களில் வில்லன், கெஸ்ட், குணசித்திர வேடங்களிலும் நடித்து மக்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாகவே தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி பிறமொழிகளிலும் வரலட்சுமிக்கு பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன அதிலும் தெலுங்கில் சொல்லவே வேண்டாம் இவர் நடிக்கின்ற ஒவ்வொரு திரைப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதால் அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது  இவரது கையில் பல படங்கள் இருக்கின்றன அந்த வகையில் இவர் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் படங்களை கைவசம் வைத்துள்ளார் மேலும் அந்த படங்கள் ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதுதான் இதோட ஸ்பெஷல். தெலுங்கிலும் பல படங்களில் இவரது கையில் இருக்கிறது.

இப்போ கூட இவர் தமிழில் அரசி என்ற ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் அந்த படத்தில் இவர் முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் நீங்கள் எந்த கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடித்தாலும் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என அவருக்கு ஆதரவாக கூறி வருகின்றனர்