வரலட்சுமி பற்றி ட்வீட் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட கீர்த்தி சுரேஷ்.! சரத்குமார் மகளாச்சே சும்மா விடுவாங்களா என்ன…

varalakshmi
varalakshmi

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் கீர்த்தி சுரேஷ் இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதன்பிறகு ரசிகர்களின் கனவு கன்னியாக உருமாறினார். தன்னுடைய அழகாலும் திறமையாலும் நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். முதலில் இவருக்கு நடிக்க தெரியாது என பலரும் கேலியும் கிண்டலும் செய்தார்கள் அதன்பிறகு மகாநதி என்ற திரைப்படத்தில் நடித்து தேசிய விருதைத் தட்டிச் சென்று அனைவரின் வாயை மூட வைத்தார்.

பாலிவுட்டில் படவாய்ப்பு கிடைத்தது ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது இருந்தாலும் அடுத்த சான்ஸ் எப்பொழுது கிடைக்கும் என ஒற்றைக் காலில் நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்.

varalakshmi
varalakshmi

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி சரத்குமார் இருவரும் இணைந்து விஜய்யின் சர்க்கார் திரைப்படம் மற்றும் விஷாலின் சண்டக்கோழி திரைப்படம் ஆகிய திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள் இருவரும் நல்ல தோழிகள்.

இந்த நிலையில் மார்ச் 3ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு ரீட்வீட் செய்த வரலட்சுமி நன்றி செல்லம் ஆனால் என்னுடைய பிறந்தநாள் 5ஆம் தேதி என ஒரே போடாக போட்டார். வரலட்சுமி சரத்குமார் பிறந்த நாளுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் முன்பே பிறந்தநாள் வாழ்த்து கூறியதை நெட்டிசன்கள் பார்த்துவிட்டார்கள் அதன்பிறகு சும்மா விடுவார்களா என்ன.

கீர்த்தி சுரேஷ் வடிவேலு மீம்ஸ் போட்டு கொண்டை மேலே இருக்கிற மண்டைய மறந்துட்டீங்களே என கலாய்த்து வருகிறார்கள்.