விஜய் பேக்ரவுண்ட் வைத்து முன்னுக்கு வந்தார்.! ஆனால் அஜித்..? பிரபல நடிகை பளீர் பேட்டி

ajith vijay-tamil360newz
ajith vijay-tamil360newz

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர், அவர்கள் இருவரும் இரு துருவங்கள் என்றே கூறலாம், அஜித்-விஜய் இருவருடன் நடித்தவர் சுவாதி, அஜித்துடன் வான்மதி திரைப்படத்திலும், விஜய்யுடன்  தேவா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

விஜய் நடித்த பிறகு அஜித்தின் வான்மதி திரைப்படத்தில் நடிப்பதற்கு சுவாதி கமிட்டானார் ஆனால் சுவாதியின் நெருங்கிய நண்பர்கள் அஜித்துடன் நடிக்க வேண்டாம், அவர் புதுமுக நடிகர் அதனால் பார்த்துக்கொள் என பலரும் அட்வைஸ் செய்தார்கள் ஆனால் கதாபாத்திரம் பிடித்திருந்ததால் சுவாதியும் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித் விஜய் பற்றி நடிகை சுவாதி பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் அஜித் விஜய் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது, அப்பொழுது சுவாதி விஜய் அப்பா பேக்ரவுண்ட் இருந்ததால் மேலே வந்தார் ஆனால் அஜித் அப்படி கிடையாது தன்னுடைய கடின உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார் என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் அஜித், விஜய் இருவரும் டிஃபரண்ட், விஜய் செய்யும் உதவிகள் அனைவருக்கும் தெரியும் ஆனால் அஜித் செய்யும் உதவி யாருக்கும் தெரியாது அந்த உதவியை யார் பெறுகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என வெளிப்படையாகக் கூறினார்,. மேலும் விஜய் அவுங்க அப்பா இருப்பதால் பேசவே மாட்டார் அனால் அஜித் பேசிக்கொண்டே இருப்பார்.

மேலும் அடுத்த ஜெனரேஷன் அஜீத் விஜய் இருவருமே சூப்பர் ஸ்டார்தான், இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது, இரண்டு பேருமே தங்களது அயராத உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள், ஆனால் விஜய் தன்னுடைய அப்பாவின் கனவை நிறைவேற்றினார் ஆனால் அஜித் தன்னுடைய கனவை நிறைவேற்றினார் என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது வான்மதி திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது வெளிநபர்கள் யாரோ ஜூனியர் ஆர்டிஸ்ட் அவர்களை கிண்டல் செய்துள்ளார் அது அஜித்தின் காதுக்கு போக உடனே அஜித் படம் நடிகை என்றால் அவ்வளவு கேவலமாக போயிடுச்சா என அந்த வெளி நபரை எச்சரித்துள்ளார். இதை வான்மதி திரைப்படத்தில் நடித்த சுவாதி இந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.