வனிதாவின் வாழ்க்கை படமாகிறது.! பீட்டர் பாலாக பவர் ஸ்டார், வனிதவாக யார் நடிக்கிறார் தெரியுமா.! வைரலாகும் புரோமோ.

vanitha
vanitha

சமீப காலமாக  சினிமா நடிகர் நடிகைகள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையில்  சிக்கித் தவிக்கிறார்.அதிலும் குறிப்பாக தமிழ் பிரபலங்கள் பலரும் இந்த சர்ச்சை என விஷயங்களில் சிக்கித்தவித்து சின்னாபின்னம் ஆகி வருகின்றனர் அப்படி தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் வனிதா.

இவர் தமிழ்த் திரையுலகில் ஒரு சில படங்களில்  நடித்துள்ள இவர் தனது அப்பா விஜயகுமார் மற்றும் அம்மா மஞ்சுளா ஆகியோரை கடுமையாக சமூகவலைதளத்தில் விமர்சித்ததால் மிகப்பெரிய அளவில் பார்க்கபட்டார். இருப்பினும் அதன்பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் இருந்த இவரை கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர் அதனை ஏற்று மீடியோ உலகிற்கு அறிமுகமானார் வனிதா.

பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டு மற்ற போட்டியாளர்களை தனது பேச்சின் மூலம் அவர்களை சின்னாபின்னமாக்கினார் இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் வெறுப்புக் கூறிய நபராக மாறினாலும் இவர் மூலம் விஜய் டிவி தனது டிஆர்பி ரேட்டை ஏற்றுக் கொண்டதால் இவரை அடுத்த அடுத்த ஷோக்களில் கமிட் செய்தது அதன் மூலம் அவர் பிரபலம் அடையவும் தொடங்கினார்.

அந்த வகையில் இவர் கொடுத்த குக் வித் கோமாளி மற்றும் ஒருசில நிகழ்ச்சிகளில், தொகுப்பாளராகவும் போட்டியாளர் ஆகவும் கலந்துகொண்டு வலம்வந்தார் இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார் அத்தகைய யூடியூப் சேனலுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த பீட்டர் பால் என்பவரை திடீரென மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு மக்கள் மற்றும் பிரபலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் வனிதா. பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டது.

மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனையடுத்து வனிதா மற்றும் பீட்டர் பாலை பலரும் விமர்சித்து வந்தனர் இதற்கு அவர்கள் பதிலடி கொடுத்து வந்தாலும் இது ஓய்ந்தபாடில்லை இந்த நிலையில் இவர்களின் திருமண வாழ்க்கையை குறும் படமாக உருவாக உள்ளது இந்த குறும்படத்தை காமெடி நடிகையான ஆர்த்தி அவர்கள் இயக்கவுளளார் பீட்டர் பாலாக பவர்ஸ்டார் நடிக்கயுள்ளார் மேலும் வனிதாக நடிக்க உள்ளார் மதுமிதா.

இக்குறும்படத்தை ஆர்த்தி இயக்கினாலும் இப்படத்தில் அவரும் அவரது கணவர் கணேசன் இதில் நடிக்கின்றனர். இதுகுறித்து ப்ரோமோ வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஆரத்தி அவர்கள் ஷேர் செய்துள்ளார் விரைவில் முழு வீடியோ வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார் இந்த புரோமோ விடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் வனிதா மற்றும் மதுமிதா இருவருக்கும்  மிகப்பெரிய சண்டை வலுப்பெற்ற வந்த நிலையில் மீண்டும் வனிதா   மீண்டும் மதுமிதாவை பஞ்சாயத்து இழுப்பார் என தெரியவருகிறது.