Actress Vanitha: ஜோவிகா தமிழ் படிக்கும் வீடியோவை அவரது அப்பா வனிதாவிற்கு அனுப்பிய நிலையில் அந்த வீடியோவை வனிதா சமூக வலைதள பக்கத்தில் பகிர சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் சில நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கி இருக்கும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதங்களும் அதிகரிக்கிறது. அப்படி குறிப்பாக விசித்ரா மற்றும் ஜோவிகா ஆகிய இருவருடைய படிப்பு குறித்த வாக்குவாதம் சோசியல் மீடியாவில் வைரலாக பலரும் ஜோவிகாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பிறகு படிப்பை நிறுத்திவிட்டார் தனக்கு படிப்பு வரவில்லை எனவும் கூறி கண்கலங்கினார். இதனை அடுத்து விசித்ரா குறைந்தபட்சம் பிளஸ் 2 அல்லது டிகிரி படிக்க வேண்டும் இன்று அறிவுரை கூற ஜோவிகா தனக்கு படிப்பு வரவில்லை என்பதற்காக தனக்கு படிக்க தெரியாது என்று அர்த்தம் இல்லை எனக்கு எழுத படிக்க தெரியும் என்று கூறினார்.
இந்த நேரத்தில் விசித்ரா எங்க தமிழ் எழுதி காட்டு பாப்போம் என்று கூற ஜோவிகா ஆத்திரமடைந்து எல்லோரும் டாக்டராகவும், இன்ஜினியராகவும் முடியாது எல்லோரும் டாக்டராகிவிட்டால் கவுண்டர் வேலையை பார்ப்பது யார். படிப்பை குழந்தைகள் மேல் திணிப்பதனால் தான் பல குழந்தைகள் தற்கொலைக்கு முயல்கின்றார்கள் குழந்தைகளுக்கு என்ன பிடித்ததோ அதை செய்ய அவர்களை அனுமதியுங்கள் என்று கூறினார்.
இவ்வாறு ஜோவிகாவிற்கு எழுத படிக்க தெரியாது என்ற விசித்ரா கூறியதனால் ஜோவிகாவின் அப்பா ஜோவிகா அழகாக தமிழ் படிக்கும் வீடியோ ஒன்றை வனிதாவிற்கு அனுப்பியதை உடனே பதிவு செய் என்று கூறியுள்ளார். இதனை அடுத்த வனிதா அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர இந்த வீடியோவில் ஜோவிகா மிக அழகாக தமிழ் படிக்கும் காட்சிகள் உள்ளது.
இது விசித்ராவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் அந்த வீடியோவில் வனிதா இந்த வீடியோவை கமல் ஹாசனுக்கு டேக் செய்து சார் ஆரம்பிக்கலாம் என்று பதிவு செய்துள்ளார். எனவே இது குறித்து கமலஹாசன் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..