வனிதா ஒன்னும் விரல் சுப்புரா குழந்தை இல்ல.! 3வது திருமணம் குறித்து பேசிய பிக் பாஸ் பிரபலம்.

bigg-boss
bigg-boss

சமீப நாட்களாக மிகப்பெரிய பேச்சாக சமுகவலைதளத்தில் அடிபட்டு கொண்டிருப்பது வனிதாவின் மூன்றாம் திருமணம் தான். வனிதா அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகி விவாகரத்தில் முடிந்துவிட்ட நிலையில் தற்போது மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் இந்த நிலையில் சமூகவலைதளத்தில் பலர் ஏகப்பட்ட விமர்சனங்களை கொடுத்துக் கொண்டு வருகின்றன அவர்களுக்கு எல்லாம் உடனுக்குடன் பதில் அளித்து கொண்டு வருகிறார் வனிதா.

இந்த நிலையில் அவருடன் இணைந்து பிக் பாஸ் சீசன் இல் கலந்துகொண்ட சாக்ஷி அவர்கள் பேட்டி ஒன்றில் வனிதாவை பற்றி சிலவற்றை கூறி உள்ளார் அதில் அவர் கூறியது. நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்தவுடன் பிக்பாஸ் பற்றிய கதைகளை நான் மூடி விட்டேன் இருப்பினும் வனிதாவை பற்றி எனக்கு தெரியும். அவர் எப்பொழுதும் தெளிவான முடிவை எடுப்பார் மேலும் இது வனிதாவின் தனிப்பட்ட விஷயம். ரசிகர்கள் பீர்பாலிடம் வனிதா அவர்கள் ஏமாந்து விட்டார்கள் என கூறிவருகின்றனர்.

அதற்கு பதிலளித்த சக்ஷி அகர்வால் வனிதா ஒன்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் சின்ன பொண்ணு கிடையாது அவர்களைப் பற்றி ரசிகர்கள் முகநூலில் சமூக வலைத்தளத்தில் எழுதி உள்ளதை திறந்து விட்டால் இந்த பிரச்சனை முடிந்துவிடும் என நினைக்கிறேன் என கூறி பதிலளித்தார் மேலும் வனிதா அவர்கள் பல்வேறு விஷயங்களை கடந்து தான் இந்த நிலைக்கு வந்து உள்ளார்.

sakshi and vanitha
sakshi and vanitha

அவருக்கு என்ன செய்கிறோம் என்று நன்கு தெரியும் எனவே அவங்களுக்கு எல்லாம் தெரிந்துதான் அனைத்தும் நடக்கிறது என ஒரேடியாக கூறினார் சாக்ஸி மேலும் என்னுடைய வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் இருக்கிறது என ஒரு குண்டை தூக்கி போட்டார்.சாக்ஷியின் இந்த பேட்டியை கண்டுள்ள வனிதா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். வனிதா ஏற்கனவே திருமணத்தைப் பற்றி பேசிய லட்சுமி ராதாகிருஷ்ணன், பிரபல நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கடுமையாக சாடிய நிலையில் தற்போது இவருக்கு நன்றி தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என கூறிவருகின்றனர்.