Vani bhojan : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன் இவர் முதலில் கிங்ஃபிஷர் ஏர்லைனில் பணி பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார் அதன் பிறகு மாடலில் தனது கேரியரை ஸ்டார்ட் பண்ணினார். கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்த இவர் சீரியலில் என்ட்ரி கொடுத்தார் ஆகா, மாயா, தெய்வமகள் என பல சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்த இவர் வெள்ளித்திரையில் ஓர் இரவு என்னும் படத்தில் நடித்து அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வெளி வந்தாலும் சுமாரான வரவேற்பையை பெற்றென. ஓ மை கடவுளே படம் தூக்கிவிட்டது அதன் பின்னர் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பாயும் புலி நீ எனக்கு, லவ் போன்ற படங்களை தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆரியன் படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் பிஸியாக ஓடினாலும் சோசியல் மீடியாவிலும் மிக ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம் அதுவும் சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் கிளாமர் அதிகமாக தெரிவதாக ரசிகர்கள் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து வாணி போஜன் பேசி உள்ளார்.
புடவை கட்டி வந்தாலும் கூட தன்னுடைய போட்டோவை எப்படியாவது ஒரு சைட்டில் ஹார்ட் என்றுதான் போட்டு இருப்பார்கள் இன்ஸ்டாகிராமில் தான் முழுவதுமாக இழுத்து போர்த்திக்கொண்டாலும் கூட தேவை இல்லாத இடத்தில் அந்த மாதிரியான புகைப்படங்கள் இருக்கும் திரைப்படங்களில் வந்த போது கூட உடன் நடிக்கும் நடிகர்களோடு சேர்ந்து வாணி போஜன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்று தான் சொல்வார்கள்.
பொண்ணுங்க வேலைக்கு போகும் போது என்னடா பொண்ணை சம்பாதிக்க வைத்து நீங்க சாப்பிடுறீங்க என்று பேச்சி இயல்பாகவே எழும் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று மிகவும் யோசிப்பேன் அப்படி அந்த அட்ஜஸ்மென்ட் செய்துதான் நான் பெரிய நடிகையாக வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என வாணி போஜன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.