ஜிவி பிரகாஷ் உடன் படுக்கையறை காட்சிகளில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.! பிறகு வேறு நடிகையை கமிட் செய்து வெற்றியை கண்ட படம்.. வைரலாகும் நடிகையின் பேட்டி

bachelor
bachelor

இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மேலும் இவர் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் பேச்சுலர்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்திருந்தார் எதார்த்தமான இவர்களுடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற நிலையில் முதலில் இந்த படத்தில் வேறொரு பிரபல நடிகை நடிக்க இருந்ததாகவும் ஆனால் அந்த நடிகை ஜிவி பிரகாஷ் உடன் படுக்கையறை மற்றும் முத்தக்காட்சிகளில் நடிக்க மறுத்ததால் பிறகு திவ்ய பாரதியை படக்குழுவினர்கள் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளனர்.

அந்த வகையில் பேச்சுலர் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக முதலில் நடிகை வாணி போஜன் தான் நடிக்க இருந்தாராம். இந்நிலையில் சமீப பேட்டியில் கலந்துக் கொண்ட வாணி போஜன் பேச்சுலர் படத்தில் படுக்கையறை நெருக்கமான காட்சிகள் அதிகமாக இருந்த காரணத்தினால் தான் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை.

நான் பேச்சுலர் படத்தில் நடித்திருந்தால் சில காட்சிகள் எனக்காக மாத்திருக்க வேண்டும் இயக்குனர் எனக்காக காட்சிகள் நீக்க கூடாது படத்தை இயக்கும் பொழுது இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும் இதனால் தான் பேச்சுலர் படத்தில் நான் நடிக்கவில்லை என வாணி போஜன் கூறியுள்ளார். இவ்வாறு வாணி போஜன் நடிக்கவில்லை என்றாலும் திவ்யபாரதியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான இவர் தற்பொழுது தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.