தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன் முதலில் சின்ன திரையில் தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு, மாயா, ஆஹா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் இது தவிர ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆகவும் பணியாற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் “ஓர் இரவு” என்னும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து நல்ல கதைகளில் நடித்து வந்த வாணி போஜனுக்கு 2023 ஆம் ஆண்டு மிகப்பெரிய ஆண்டாக அமைந்துள்ளது கைவசம் மட்டும் பத்து படங்கள் வைத்திருக்கிறார் அந்த வகையில் ஊருக்குருவி, பகைவனுக்கு அருள்வாய், casino, பாயும் புலி நீ எனக்கு, லவ், ரகளை, ஆர்யன் மற்றும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஓடிக்கொண்டிருக்கும் வாணி போஜன் ஒரு சில முக்கிய திரைப்படங்களையும் தவற விட்டுள்ளார் அப்படி 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் உருவான பேச்சுலர் திரைப்படத்தில் முதலில் வாணி போஜன் தான் ஹீரோயின்னாக நடிக்க இருந்ததாம் ஆனால் சில காரணங்களால் தவிர்த்து உள்ளார்.
அது குறித்து சமீபத்தில் வெளிப்படையாக பேசியுள்ளார் வாணி போஜன் அதில் சொன்னது.. பேச்சுலர் படத்தில் இடம்பெற்றுள்ள சில நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள் காரணமாகத் தான் வாணி போஜன் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி விலகி உள்ளார்..நான் பேச்சுலர் படத்தில் நடித்திருந்தால்..
எனக்காக அந்த படத்தில் காட்சிகள் மாறி இருக்கும் எனக்காக எந்த காட்சியையும் இயக்குனர் மாற்றக்கூடாது இயக்குனரின் சுதந்திரமும், கிரியேட்டிவிட்டியும் பறிப்போகக்கூடாது அதனால் தான் நான் பேச்சிலர் படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்ததாக நடிகை வாணி போஜன் வெளிப்படையாக கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.