திரையில் நாயகிகளை போதை பொருளாக ஆக்கப்படுவதை பார்க்கையில் மிகவும் பயமாக இருக்கிறது என இளம் நடிகை வாணி போஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் வாணி போஜன் இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார் அதன் பிறகு இவரை பார்த்தவர்கள் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்கள் சீரியலில் தெய்வமகள் என்ற சன் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் அதுமட்டுமில்லாமல் லட்சுமி வந்தாச்சு, மாயா ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.
மெதுவாக இல்லத்தரசிகளை கவர்ந்த வாணிபோஜன் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கால்தடம் பதித்தார் வெள்ளித்திரையில் முதன் முதலாக ஓர் இரவு, அதிகாரம் 79 ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் இதற்கு முன் அசோக்செல்வன் அவர்களுடன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் தான் முதன்முதலில் வெளியாகியது.
சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் வாணிபூஜன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாட்டி வதைத்தார். ஓ மை கடவுளே திரைப்படத்தில் அசோக்செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள் இந்த திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக வாணிபோஜன் நடித்திருந்தாலும் இவரது பெயரும் புகழும் பெற்று கொடுத்தது இந்த திரைப்படம் தான்.
அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் வாணிபோஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகீர் கிளப்பியுள்ளார் அந்த பேட்டியில் நடிகைகள் படும் துயரம் பற்றி ஓபனாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது வளர்ந்து வரும் நாயகிகளாக இருக்கும் பல நடிகைகள் என்னும் போதைப் பொருளாக தான் மாற்றப்படுகிறார்கள் இது வழக்கமாகிவிட்டது இதனை மாற்ற வேண்டும் நாயகிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை பார்க்கும்போது மிகவும் பயமாக இருக்கிறது. என உண்மையை பேட்டியில் போட்டு உடைத்துள்ளார்.
சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம் இன்னும் இருப்பதாகவும் ஆனால் இதுவரை எனக்கு அதுபோல் நடக்க வில்லை எனவும் எல்லா பெண்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.