குடும்ப குத்து விளக்காக மாறிய வாநிபோஜன்.! வைரலாகும் புகைப்படம்

vani bhojan

நடிகை வாணி போஜன் தமிழ்சினிமாவில் மாடல் மற்றும் நடிகையாக திகழ்ந்து வருபவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் முதலில் விஜய் டிவியில் ஆஹா என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் பின்பு அதனை தொடர்ந்து ஜெயா டிவி, ஜீ தமிழ், சன் டிவி என அனைத்து தொலைக்காட்சியிலும் சீரியல் நடிகையாக வலம் வந்தவர். ஆனால் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலமே மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தவர்.

வாணி போஜன் வெள்ளித்திரையில் ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்திருந்தாலும் பின்பு ஒரு கட்டத்தில் இவர் முக்கிய கதாநாயகியாக ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டவர்.

இந்த படத்தை தொடர்ந்து மலேசியா டு அம்னேஷியா , லாக் அப் மற்றும் சூர்யா தயாரிப்பில் வெளிவந்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் டாப் நடிகர்களில் ஒருவரான விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் திரைப்படத்திலும் வாணிபோஜன் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் ஏனோ சில காரணங்களால் அந்த மகான் திரைப்படத்தில் இவரது காட்சிகள் இடம்பெறவில்லை. இந்த 2022ஆம் ஆண்டு இவர் கைவசம் பல திரைப்படங்கள் உள்ளன. அந்த வகையில் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயுமொளி நீ எனக்கு ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜன் சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவரும் வகையில் விதவிதமான உடை அணிந்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகின்றார். புடவையில் அதிகம் புகைப்படங்களை வெளியிட்டு வரும் வாணிபூஜன் தற்போது தங்க நிற புடவை அணிந்து செம கூலாக போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.